இலங்கைப் பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொலை!

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது வீட்டு உரிமையாளர்களான தம்பதியினர் விசாரிக்கப்பட்டு வருவதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.

46 வயதான இலங்கை பணிப்பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.

அவரது உடலில் தீக்காயங்கள், வெட்டுக் காயங்கள் இருந்தன. அவர் அமிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தின் பின்னர் இறந்தார். அவரது வீட்டு எஜமானரே அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

பணிப்பெண்ணின் மரணத்துடன் வீட்டு எஜமானர்களிற்கு தொடர்புள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here