15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த உபஅதிபர் கைது: வெளியில் சொல்லாமலிருக்க 100,000 ரூபா வழங்கிய மனைவி!

மேலதிக கல்வி வகுப்புகளை நடத்துதல் என்ற போர்வையில் 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் உதவி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பாணந்துறை- தென் காவல்துறையினர் புதன்கிழமை (09) சந்தேக நபரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, பொலிசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து உப அதிபர் கைது செய்யப்பட்டார்.

உதவி அதிபரின் வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவன் சிங்கள பாடத்தில் பலவீனமாக இருந்ததால், உப அதிபரின் சிறப்பு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் உதவி அதிபரின் இல்லத்தில் தனியாக வகுப்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்புகளின் போது- கடந்த ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகினான்.

ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கு வருமாறு உப அதிபர் நெருக்கடி தந்ததாக சிறுவனின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ள சிறுவன் மறுத்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அதற்கான காரணத்தை பெற்றோர் விசாரித்தபோது, பாலியல் துஷ்பிரயோக விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தாயார், தனது சகோதரரையும் அழைத்துக் கொண்டு உபஅதிபரின் வீடு தேடி சென்றுள்ளார். அங்கு உபஅதிபரை கொட்டனால் தாக்கியுள்ளார்.

அவர்களை உபஅதிபரின் மனைவி சமரசம் செய்து வீட்டிற்குள் அழைத்து சென்று, விடயத்தை வெளியில் விடாமல் இருங்கள் என கூறி 100,000 ரூபாவ வழங்கியுள்ளார்.

உப அதிபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here