சம்பந்தனிற்கு கடுமையான உடல்நல குறைவு: வீட்டைவிட்டு வெளியில் செல்லவும் வைத்தியர்கள் தடை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.உடலளவில் மிகப் பலவீனமாகியுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது சொகுசு பங்களாவில் (ரணில் அரசில் வழங்கப்பட்டது) தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பந்தனின் உடல்நல குறைவால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு தாமதமாகி வருகிறது. கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றம் கூடி, புதிய பேச்சாளரை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் சம்பந்தனின் உடல் நல குறைவினால் கூட்டம் நடைபெறவில்லை. இன்று (24) கூட்டம் நடப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இன்றும் கூட்டம் நடப்பது சந்தேகமாகியுள்ளது.

இன்று காலை இரா.சம்பந்தனை வைத்தியர்கள் மீள பரிசோதிப்பார்கள். இன்றைய பரிசோதனையின் பின்னர், மருத்துவர்களின் அறிவுறுத்தல் கிடைத்தால்- இன்று மதியம் அல்லது மாலையில் இரா.சம்பந்தனின் வீட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here