Walkntalk: இனி நடந்தபடியே கூட்டங்கள்; நாமல் புது திட்டம்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில், நடைபயிற்சியின் போதே கூட்டங்களை நடத்துவதற்கான புதிய திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ இன்று அறிமுகப்படுத்தினார்.

“Walkntalk” என அழைக்கப்படும் நடந்தபடி விவாதிக்கும் திட்டத்தை இன்று (11) நாமல் அறிமுகப்படுத்தினார்.

இதன்படி, சமுர்த்தி வீட்டு பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிகங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹன் செமசிங்கவுடன் இன்று முதல் சந்திப்பை நடத்தினார்.

தொழில்முனைவோர் மற்றும் தொழிலை ஆரம்பிப்பவர்களிற்காக இரண்டு அமைச்சுக்களும் இணைந்து பணியாற்றக் கூடிய வழிமுறைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here