நாளை என்ன செய்வது?: வவுனியா தனியார் போக்குவரத்து துறையில் குழப்பம்!

நாளைய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா என்பதில் வவுனியா தனியார் போக்குவரத்து துறையிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வவுனியா ஈ.பி.டி.பி எம்.பி, கு.திலீபன் மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆதரவு தரப்பினர் நாளை பேருந்து சேவையை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். எனினும், தமிழ் தேசிய நிலைப்பாடுடையவர்கள் அதை ஏற்காமல், போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள்.

திலீபனின் நினைவேந்தலிற்கு எதிராக- அதை குழப்பும் விதமாக ஆரம்பத்திலிருந்தே ஈ.பி.டி.பி செயற்பட்டு வந்த நிலையில், வவுனியா போக்குவரத்து துறையிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here