ஒலிவாங்கியை எடுத்து வர மறுத்த மாணவனின் பல்லை உடைத்த ஆசிரியர்!

வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்திய சாலையில் அவமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது
(மைக்) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப் பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்து வருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். மாணவன் ஒலிவாங்கியை எடுத்துவர மறுப்புத் தெரிவித்துள்ளார் .

ஆத்திரம் அடைந்த ஆசிரியர்- மணவர்கள், 63 ஆசிரியர்கள் ஒன்றுகூடியிருந்த காலைப்பிரார்த்தனை இடத்தில் வைத்து அம் மாணவனின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அதிபர் உட்பட ஆசிரியர்கள் எவரும் தடுக்கவில்லை .

பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கன்னத்தில் காயமடைந்த மாணவனின் பல் உடைந்துள்ளதாக தெரிவித்து 12 என்ற மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here