பனிக்கன்குளம் உள்ளக வீதிகளில் வியாபார நோக்கத்தோடு பார வாகனங்கள் செல்வதற்கு தடைவிதித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது
இந்நிலையில் தொடர்ச்சியான மணல் அகழ்வு காரணமாக பனிக்கன்குளம் கிராமத்தில் உள்ளக வீதிகளில் பார வாகனங்கள் பயணிப்பதால் வீதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு உள்ளக வீதிகளில் வாகனங்கள் செல்வதை தடை செய்து தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கிராம பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
குறித்த கோரிக்கை கடிதத்தில் கடந்த 3-9 -2020 ஆம் திகதியன்று முல்லைத்தீவு பனிக்கன்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் பனிக்கன்குளம் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி கிராம அலுவலர் முன்னிலையில் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர் அதன்படி பனிக்கன்குளம் கிராமத்தில் உள்ள உள்ளக வீதிகளில் பார வாகனங்கள் செல்வதை தடை செய்யுமாறு தீர்மானித்திருந்ததாக தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் நேற்றைய தினம்(10) புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உடைய அமர்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் அ.தவக்குமார் தலைமையில் இடம் பெற்றது
இதன்போது திருமுருகண்டி வட்டார உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்கள் குறித்த வீதிகளில் பார வாகனங்களை செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்
இதன்போது குறித்த வட்டாரத்தைச் சார்ந்த உறுப்பினர் செல்லையா பிரேமகாந்த் அவர்கள் குறித்த கிராமத்தின் நிலைமைகளைத் தெளிவாக விளக்கி இந்த வீதிகளின் புனரமைப்பு எவ்வாறு நடைபெற்றது எனவும் வீதியில் பார வாகனங்கள் சென்று வீதி பழுதடைந்தால் திருத்துவதில் உள்ள சிக்கல்களை காரணம் காட்டியும் கிராம மட்ட பொது அமைப்புகளின் தீர்மானத்தை காரணம் காட்டியும் குறித்த வீதிகளில் வாகனங்கள் செல்வதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மிக நீண்ட நேரமாக காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரது பூரண சம்மதத்தோடு வியாபார நோக்கங்களுக்காக பயணிக்கின்ற பார வாகனங்களை முற்று முழுதாக தடை செய்வது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
அத்தோடு இந்த விவாதங்களின் போது பிரதேச சபையின் உடைய கௌரவ தவிசாளர் அவர்களினால் அண்மையில் வடமாகாண ஆளுநர் அவர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுநர் அவர்களும் உள்ளூராட்சி மன்ற வீதிகளை பாதுகாக்கும் நோக்கோடு உள்ளூராட்சி மன்ற வீதிகளில் நிறை அளவுகளுடன் கூடிய பெயர் பலகையை இ டுமாறும் அதன் மூலம் பொலிசார் குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று கூறியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார் என தெரிவித்தார்
இந்நிலையில் இறுதியாக குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்து குறிப்பிடத்தக்கது