யாழில் மர்ம நபர்கள் கைவரிசை: வீடு புகுந்து மோட்டார் சைக்கிள்களிற்கு தீ!

சுண்டுக்குளி பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி குருசர் வீதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதோடு வீட்டின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டு வீட்டின் வாயில் கதவிலும் வாள்களால் வெட்டப்பட்டுள்ளது.

வீட்டில் அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளையில் இனந்தெரியாத குழுவொன்றினால் குறித்த சம்பவம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த போதிலும் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததன் காரணமாக வீடு முழுவதும் தீ பரவி வீட்டிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here