இலங்கையின் பயங்கரமான கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து பூசா சிறைச்சாலையில் சுமார் நாற்பது கைதிகள் நேற்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக சிறை ஆணையர் (நிர்வாக) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்பட முக்கிய குற்றவாளிகள் அண்மையில் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

காஞ்சிபானை இம்ரான், போடி லாஸ்ஸி, கொஸ்கொட தாரக, வெலே சுதா போன்ற மோசமான பாதாள உலக நபர்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்திலிருந்து மீளவும் சிறைச்சாலை திரும்பும்போது அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் முழுமையான தேடல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தொலைபேசி வசதி மற்றும் அவர்களது சட்டத்தரணிகளுடன் பேச அதிக நேரம் கோருவதாகவும், சிறை சிற்றுண்டிச்சாலையில் இருந்து பொருட்களை வாங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள ரூ .8,000 மாத வைப்புத்தொகையை அதிகரிக்கக் கோருவதாகவும் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​கைதிகள் வாரத்திற்கு ஒரு பார்வையாளரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க அவர்கள் கோருகின்றனர் என்றார்.

பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஜூன் மாதத்திலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு நடத்த சென்ற சிறைச்சாலைகள் திணைக்கள உயரதிகாரிகளிடம் பொடி லாஸ்ஸி, ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here