யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரே விசேட அதிரடிப்படையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சட்டநடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

கடந்த வாரமும் யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here