கல்முனையில் பட்டதாரிகளுக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம்!

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் 60000 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களுக்கு இணைப்பு செய்யபட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றது அதற்கு அமைவாக இன்று(10) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வளவாளராக கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அரச கொள்கைகள் அரச திட்டமிடல் செயற்பாடுகள் சம்மந்தமாக, வினைத்திறன்மிக்க சேவைகளை பெற்றுக்கொள்ளுவதற்கும், சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பட்டதாரிகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்- நாட்டில் கோவிட்- 19 ற்கு பிறகு நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் பட்டதாரிகளாகிய உங்களுக்கு அரச தொழில் வழங்கி இருப்பதானது நாம் ஒவ்வொருவரும் நாட்டின் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிக்கடன் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் ஹசன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எல்.எம் சர்ஜுன்,எம். எஸ் ரியாஸ் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here