கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்து வெளியான தகவல்!

த ஐலண்ட் ஊடகவியலாளர் ஜாக்கி ஜபார் (60) நேற்று இரவு (09) பெலவத்தையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதா தலங்கம பொலிசார் தெரிவித்தனர்.

ஜாக்கி ஜபார் தனியாக வசித்து வந்தவர்.

கடந்த 20 நாட்களில் எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக நிறுவன தொடர்புகளும் இல்லாமல் இருந்துள்ளார்.

நேற்று இரவு அவர் சடலமாக வீட்டுக்குள் கண்டுபிடிக்கப்படும் வரை, அவரது உயிரிழப்பை அயலவர்களும் அறிந்திருக்கவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

உடலின் முதற்கட்ட பரிசோதனையில் அவர் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதால் வெளியே துர்நாற்றம் வீசவில்லை.

ஜாக்கி ஜபார் திருமணமாகாதவர். தனது சகோதரருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று பின்மாலை வீட்டிற்கு வந்த ஜபாரின் சகோதரர் ஜன்னலைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில், குளியலறைக்கு  அருகில் ஜபாரின் உடலை அவர் கண்டுபிடித்தார்.உடனடியாக பொலிசாருக்கு அறிவித்தார்.

தலங்கம பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது, அதே நேரத்தில் மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here