கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,152 ஆக உயர்ந்துள்ளது.

மாலைதீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து நபர்கள் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கிடையில் மேலும் ஒன்பது பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 2,955 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட 185 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.70 பேர் வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here