20வது திருத்தத்தில் மேலும் திருத்தங்கள் இடம்பெறலாம்!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு தேவைப்பட்டால் வரைபில் மேலும் திருத்தங்களை செய்யும் என்று இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (10) தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் கம்மன்பிலா,

20ஆம் திருத்தம் வர்த்தமானியிடப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் முன்வைப்பார் என்றார்.

20 வது திருத்தத்தின் வரைவு செப்டம்பர் 03 அன்று நீதி அமைச்சினால் வர்த்தமானியிடப்பட்டது.

எதிர்க்கட்சி, நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற இரண்டு வாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என கம்மன்பில தெரிவித்தார்.

நீதி அமைச்சரால் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும், முதல் வாசிப்பு நடைபெறும். இதைத் தொடர்ந்து 20 வது திருத்தத்தின் வரைவை பரிசீலித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்திற்கு இன்னும் ஒரு வாரம் ஒதுக்கப்படும். எந்த பகுதிகளை திருத்த வேண்டும், பொது வாக்கெடுப்பு தேவையா என்பதை உயர் நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என்று அவர் விளக்கினார்.

உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையைப் பொறுத்து, திருத்தப்பட வேண்டிய பகுதிகளை, 20 ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு பரிசீலிக்கும், மேலும் திருத்தங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் கமன்பில கூறினார்.

20 வது திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் பெறும் என கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கிடையில், அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலியா ரம்புக்வெல்லா, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது ஜனநாயக உரிமை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here