ஆனைவிழுந்தான் காடழிப்பில் கோட்டாவின் அமைச்சருக்கும் தொடர்பு?

ஆனைவிழுந்தான் சதுப்பு நிலம் அழிக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தற்போதைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சதுப்பு நிலங்களை அழிப்பது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில், விசாரணையின் ஒரு பகுதியாக பொலிசாரால் பதிவு செய்த அறிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ளது.

இறால் வளர்ப்பிற்காக ஆனைவிழுந்தானின் சதுப்பு நிலங்களின் ஒரு பகுதியை அழிக்க ஜகத் சமந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்தின.

ஓகஸ்ட் 25 அன்று அடையாளம் தெரியாத குழு ஒன்று இறால் வளர்ப்பிற்காக சதுப்பு நிலங்களை அழித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதையடுத்து, அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியது.

இதேவேளை, வனாத்தவில்லு ஆனைவிழுந்தானில் 200 ஏக்கர் சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் தவறானவை, 1.65 ஏக்கர் மட்டுமே காடழிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன என்று வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here