ஓடியோ லீக் ஆன விவகாரம்: வவுனியா கிராமசேவகர் முறைப்பாடு!

வவுனியா வடக்கு கிராம அலுவலகரின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படும் உரையாடலை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து நேற்று கிராம அலுவலகர் ஒருவரினால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி மாலை வவுனியா வடக்கு பரசன்குளம் பகுதியில் மழையுடன் காற்று வீசியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கிராம அலுவலரை தொடர்பு கொண்டபோதும், அவர் பொறுப்பற்றவிதமாக பதிலளித்தார் என குறிப்பிட்டு, அந்த தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் முறையிட்டுள்ள கிராம அலுவலர், தன்னுடன் இடம்பெற்ற உரையாடல் ஒன்று எவ்வாறாக வெளியே சென்றது, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கடமைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டு முறைப்பாடு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here