மௌலவி, சட்டத்தரணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியம் வழங்கலை இரகசியமாக ஒலிப்பதிவு செய்த, அகில இலங்கை ஜாமியத்துல் உலமா சபை பதில் செயலாளர் மற்றும் அவரது சட்டத்தரணி மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசர தேரரின் சாட்சி விசாரணைணை, மௌலவி இரகசியமாக பதிவு செய்தமை அம்பலமானதையடுத்து, ஆணைக்குழுவின் தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஞானசாரர் நேற்று (09) ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்தார். அங்கு சில இஸ்லாமிய அமைப்புகளின் சட்ட பிரதிநிதிகளால் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டார்.

கையடக்க தொலைபேசியை மௌலவியிடம் ஒப்படைத்த சட்டத்தரணிக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும்படி ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒழுக்காற்று குழுவிலும், சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்து கொள்ளும் அனைத்து சட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்காலத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here