கொரோணா வைரஸ் காலப்பகுதி வர்ண போட்டி

கொரோணா வைரஸ் காலப்பகுதியில் பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் வர்ணம் தீட்டுதல் போட்டிகள் நடைபெற்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற வர்ணம் தீட்டுதல் போட்டிகளில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வி.குகதாசன், செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கொரோணா வைரஸ் காலப்பகுதியில் நடைபெற்ற வர்ணம் தீட்டுதல் போட்டியில் பங்குபற்றிய 25 பிள்ளைகளுக்கான அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here