கிளிநொச்சியில் பயங்கரம்: ஒரே கயிற்றில் உயிரை மாய்த்த காதல் ஜோடி!

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லை அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளர். இந்த நிலையில் இன்று காலை பெரியபரந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்தே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்ற யுவதியாகும், இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here