கொரோனா தொற்று உலக மக்களிடையே ஏற்படுத்தப் போகும் பெரும் ஆபத்துக்கள்: ஐ.நா எச்சரிக்கை!

உலகில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பாகுபாட்டையும், மனித உரிமை மீறல்களையும் மேலும் சண்டை சச்சரவுகளையும், பசியையும் வறுமையையும் அதிகரிக்கவே செய்யும் என்று ஐநா ஒரு இருண்ட சித்திரத்தை அளித்துள்ளது.

ஐநா அரசியல் தலைமை ரோஸ்மேரி டிகார்லோ, ஐநா மனிதார்த்த தலைமை மார்க் லோகாக் ஆகியோர் கொரோனாவின் உலக அளவிலான தாக்கம் குறித்த இவ்வாறான இருண்ட சித்திரத்தை அளித்துள்ளனர். உலகம் முழுதும் கொரோனாவுக்கு 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,60,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஐநா கவுன்சிலில் அவர்கள் அளித்த அறிக்கையில், கொரோனாவினால் ஏற்படும் மறைமுக பொருளாதார, சுகாதார விளைவுக்ள் பலவீனமான நாடுகளில் அதிக வறுமை, ஆயுள் குறைதல், மேலும் பட்டினிக் கொடுமை, கல்வியின்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பு

மனிதார்த்த நெருக்கடிகள், அகதிகள் நெருக்கடி அதிகம் ஏற்பட்டுள்ள உடனடியாக தாக்குறும் நாடுகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்புகள், மரண விகிதங்கள் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

இந்தநாடுகளில் கொரோனா வைரஸ் சோதனைகள் மிகவும் குறைவு. இந்நாடுகளில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் தனிமைப்படுத்தலுக்குப் பயந்து சோதனையை மறுக்கின்றனர்.

ஆனால் ஒரே நல்ல விஷயம் இந்த பலவீனமான நாடுகளில் கொரோனா மரணங்கள் குறைவாக இருக்கிற்து.

ஆகவே கொரோனா பெருந்தொற்று ஆபத்து நீங்கும் வரை உலக அளவில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். கொலம்பியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், கமரூன் நாடுகளில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

ஏமன், சிரியா, மற்றும் பல இடங்களில் அமைதி மார்க்கத்துக்கு கட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் பார்வையில் ‘நாடுகள் கொரோனா விவகாரத்தில் வெளிப்படையாக இல்லை, தக்கம் குறித்த எதிர்கொள்ளலில் திறமையாகச் செயல்படவில்லை’ என்ற கருத்தே நிலவுகிறது. கொரோனா விவகாரத்தில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தப் பார்வையை அதிகரிக்க மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் சிகிச்சையில் ஏற்றத்தாழ்வுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகள், ஊடகங்களை பெரிய அளவில் கட்டுப்படுத்துவது, குடிமைஉரிமைகள் மறுக்கப்படுதல், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுதல் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

சமூக ஊடகங்கள் பொய்யையும் புரட்டையும் பரப்புவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன, நாடுகள் இதைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூக ஊடகங்களில் பலிகடா ஆக்குவதும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளும் அதிகரித்துள்ளது, குறிப்பாக புலம் பெயர்ந்தோர் மற்றும் அன்னிய தேசத்தவர் மீது வசையும், வெறுப்பும் பரப்பப் படுகிறது.

27 நாடுகள் உணவுப் பாதுகாப்பில் மிகவும் அதிகமாக பின்னடைவு கண்டுள்ளன. ஊட்டச்சத்தின்மை, உணவு உள்ளிட்ட பிரச்சினைகளினால் 70 இலட்சம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்.

இவ்வாறு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here