585 பேர் இன்று வீடு திரும்புவர்!

முப்படைகளால் இயக்கப்படும் 9 தனிமைப்படுத்தல் மையங்களில், தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த 585 நபர்கள் இன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விடுவிக்கப்படுவார்கள்.

இதுவரை, 39,230 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6,126 பேர் தற்போது 57 தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், மேலும் 647 இலங்கையர்கள் இன்று காலை சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானம் அபுதாபியிலிருந்து இலங்கையர்களை ஏற்றி வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here