ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசாரரின் சாட்சியத்தை இரகசியமாக பதிவு செய்த மௌலவி சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளை தனது கையடக்க தொலைபேசியில் மௌலவியொருவர் இரகசியமாக பதிவு செய்த தகவல் அம்பலமாகியுள்ளது.

நேற்று, பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று மதியம் சாட்சியமளித்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றது.

அனைத்து இலங்கை ஜமாஅத்துல் உலமா சபையின் பதில் செயலாளரே இரகசியமாக ஒலிப்பதிவில் ஈடுபட்டுள்ளார்.

ஞானசாரரை குறுக்கு விசாரணை செய்ய பல முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து, நேற்று ஞானசாரர் முன்னிலையாகினார்.

ஞானசார தேரர் சாட்சியங்களை வழங்கத் தொடங்கிய சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சாட்சியம் வழங்கப்பட்ட அறையில் இருந்த மௌலவி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸ் அதிகாரிகள், மௌலவியை வெளியே அழைத்து விசாரணை நடத்தினர்.

இதன்போது, ஞானசாரரின் சாட்சியத்தை தனது கையடக்க தொலைபேசியில் மௌலவி பதிவு செய்தது தெரியவந்தது.

ஆணைக்குழுவிற்குள் நுழையும் வெளியார் யாரும் தனது கையடக்க தொலைபேசியை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், குறிப்பிட்ட மௌலவி கையடக்க தொலைபேசியை தனது சட்டத்தரணியிடம் வழங்கியதும், ஆணைக்குழுவிற்குள் நுழைந்ததும், மீளவும் இரகசியமாக கையடக்க தொலைபேசியை மௌலவி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here