ஹெரோயினுடன் கைதான பொலிஸ் அதிகாரியின் மகள்!

170 மில்லிகிராம் ஹெரோயினுடன் யுவதியொருவரை கொட்டாவ பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று (9) இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆறு ஆண்டுகளாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

31 வயதான அந்த யுவதி, ஓய்வுபெற்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் மகள் ஆவார்.

யுவதியும் ஹெரோயினுக்கு அடிமையானவர் என பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here