மதுஷின் பிணை மனு நிராகரிப்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரன் சமரசிங்க அராச்சிகே மடுஷ் லக்சித அல்லது மகந்துரே மதுஷை விடுவிப்பதற்கான பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசானாயக்க நேற்று நிராகரித்தார்.

தனது வாடிக்கையாளரை சிஐடியால் முறையற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி, மக்கந்துரே மதுஷ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜே.சேனரத்னாவின் கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மதுஷை விடுவிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, மதுஷை சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும், சந்தேக நபரை கைது செய்வது குறித்து கேள்வி இருந்தால், அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யும்படியும் நீதவான் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here