கொழும்பில் ஊடகவியலாளர் சடலமாக மீட்பு!

கொழும்பு பெலவத்தை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

த ஐலண்ட் பத்திரிகையில் பணியாற்றும் ஜாக்கி ஜப்பார் (60) என்பவரே நேற்று (09) சடலமாக மீட்கப்பட்டார்.

தனது வீட்டில் தனியாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஜப்பார், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிக்கு செல்லவில்லை.

உறவினர் ஒருவர் அவரை தேடிச் சென்றபோது, அவர் உயிரிழந்த விடயம் தெரிய வந்தது.

தனது வீட்டில் தனியாக வசித்து வந்த பத்திரிகையாளர் பல நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று பொலிசார் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here