தகவல் கோரும் பொலிசார்!

நிதி மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரை அடையாளம் காணுவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அனுராதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 65 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ள சந்தேக நபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவரை கைது செய்வதற்கு முடியாமல் இருப்பதாகவும் , அவரை அடையாளம் காணுவதற்கு உதவுமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எப்பாவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஹேரத் முதியன்சலாகே சமன் குமார ஹேரத் என்பவரையே இவ்வாறு அடையாளம் காணுவதற்கு பொலிஸார் உதவிக் கோரியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால். அதனை 025-2226014 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here