தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையுடன் மாவட்ட செயலகமும் இணைந்து பாடசாலை சிறுவர் பாதுகாப்பு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரனையுடன் மாவட்ட செயலகமும் இணைந்து பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் இடைவிலகல் கண்காணிப்பு குழுக்களை மீளமைத்தல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு கல்குடா வலய கல்வி பணிப்பாளர் தினகரன் ரவியின் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை மட்டங்களில் பிள்ளைகளுக்கான கற்றல் சூழலை உறுதிப்படுத்தி பாடசாலைகளில் பிள்ளைகள் தொடர்பாக ஏற்படும் துஷ்பிரயோகங்களை சரியான முறையில் கையாள்வதுடன் அவர்களது அறிவு,திறன்,மனப்பாங்குகளில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட ‘சுரக்கும்பவ’ சுற்றறிக்கையினை செயற்படுத்தும் முகமாக ‘பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை ‘ அமைத்தலும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கண்காணித்தலும், மற்றும் பாடசாலைக் குழு,கண்காணிப்புக் குழு போன்றவற்றினை ஏற்படுத்தி நடைமுறைபடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

2016.4.20 இல் வெளியிடப்பட்ட 185 ஆம் இலக்க கல்வி கட்டளைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகஸ்த்தர்களின் பங்களிப்பினை பெற்று வலயக் கல்விப்பணிமனை கல்குடாவினுள் உள்வாங்கப்படும் பாடசாலைகளின் செயற்பாடுகளினை வினைத்திறனாக்குவதுடன் முறையான ஆவணங்கள் மற்றும் கண்காணிப்பினை நெறிப்படுத்தலைக் கொண்டு கலந்துரையாடல் மேற் கொள்ளப்ட்டது.

பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி கங்கேஸ்வரன்,திருமதி றிஸ்மியா பானு, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.பிரபாகர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here