காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!

மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டி வருகின்றன.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்தை விட 3 அடி குறைவாகவும், மவுச்சாலைநீர்த்தேக்கம் 8 அடி குறைவாக இருப்பதாகவும் நீர்த்தேகங்கங்களிற்கு பொறுப்பான பொறியிலாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களில் தொடர்ச்சியான மழை காரணமாக லக்சபனா, புதிய லக்சபனா, பொல்பிட்டி மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு அதிகரித்ததால், மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மின் உற்பத்தி அதிகபட்ச திறன் கொண்டிருந்தாக பொறியாளர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here