நாய்க்குட்டியை கொடூரமாக தாக்கி கொன்றவர் கைது!

கலாவன பகுதியில் நாய்க்குட்டியொன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.

இது தொடர்பாக பொலிசார் நடவடிக்கையெடுக்க தாமதிப்பதாக பொலிசார் மீது சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கலாவன பொலிசாரை விசாரணையை ஆரம்பிக்க பொலிஸ் திணைக்களம் உத்தரவிட்டது.

விசாரணையைத் தொடர்ந்து கலாவன பொலிசார் நேற்று (08) ஒரு சந்தேக நபரை கைது செய்து இன்று கலவனா  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here