348 பேர் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 348 பேர் இன்று ஐந்து சிறப்பு விமானங்களில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 238 பேர், துபாயிலிருந்து 09 பேர், கத்தாரிலிருந்து 28 பேர், இந்தியாவில் இருந்து 63 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

348 பயணிகளும் இராணுவத்தால் இயக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 67 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 6,167 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 38,863 நபர்கள் தனிமைப்படுத்தலை முடித்துள்ளனர்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சு நேற்று 1,560 பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியது. இலங்கையில் இன்றுவரை கிட்டத்தட்ட 242,984 பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here