இலங்கை நாடாளுமன்றத்தில் சபை அமர்வுகளில் தலைமைதாங்கும் நடைமுறைகள்!

இலங்கை பாராளுமன்றத்தில் சபை அமர்வுகளில் ஐந்து முறைகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் தலைமை தாங்கமுடியும்.

1. சபாநாயகர்.
2. பிரதிசபாநாயகர்.
3. குழுக்களின்பிரதி தலைவர்.
4. கட்சிகளால் பரிந்துரிக்கப்பட்டு சபாநாயகருக்கு முற்கூட்டியே பெயர் குறிப்பிட்ட உறுப்பினர்கள்.
5. சபை அமர்வு இடம்பெறும்போது மேற்குறிப்பிட்ட எவரும் சபையில் இல்லாதவேளை சபை அமர்வில் உள்ள யாராவது ஒரு உறுப்பினரின் பெயரை தலைமைதாங்கும் உறுப்பினர் அழைக்க முடியும்.

இதில் உத்தியோகபூர்வமான நியமனம் அல்லது பதவி சபாநாயகர், பிரதிசபாநாயகர், குழுக்களின் பிரதிதலைவர் மட்டுமே இந்த பதவி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் தெரிவுசெய்யப்படுவார்கள்.

இவர்களுக்கு மேலதிக் சலுகைகள், வரப்பிரசாதங்கள், உத்தியோகபூர்வ வாகனங்கள், மேலதிக செயலாளர்கள், எரிபொருள் கொடும்பனவுகள் என்பன உண்டு.

கடந்த 2015, நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு இந்த வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதற்கு முன்னர் முருகேசு சந்திரகுமார் குழுக்களின் பிரதி தலைவராக இருந்தார்.

ஏனையவர்கள் சபைக்கு தலைமை தாங்கினாலும் அது பதவியாக கருதுவதில்லை. அமர்வில் தலைமை தாங்குவதும் அமர்வு முடிந்தவுடன் அந்த பணி் தானாக விலகும். இதுவே நடைமுறை.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணாக்கிய ராகூல் நாடாளுமன்ற அமர்வில் தலைமை தாங்கிய விடயத்தை சில ஊடகங்கள் அவருக்கு பதவி வழங்கியதாக குறிப்பிடுவது தவறு.

இது பதவி இல்லை. பாராளுமன்ற மரவு அல்லது சம்பிரதாய வழமையான நடைமுறை என்பதை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவோரும், ஊடகங்களும் உணரவேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்த மாவை சேனாதிராசா, த.கனகசபை, க.தங்கேஸ்வரி, பொ.செல்வராசா, கே.துரைரெட்ணசிங்கம், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் என பலர் சபை அமர்வுகளுக்கு தலைமைதாங்கிய வரலாறு உண்டு.

சபை அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கு மும்மொழி, இருமொழி அவசியம் என்று எந்த விதிகளும் இல்லை. தமிழ் மட்டும் அல்லது சிங்களம் மட்டும் தெரிந்த எவரும் தலைமை தாங்க தகுதியுண்டு.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளுக்கும் உரைபெயர்ப்பாளர்கள் உண்டு.

விரும்பிய எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சபைக்கு தலைமை தாங்க முடியும்.

நாடாளுமன்ற நடைமுறைகள் சம்பிரதாயங்களை புரியாது சமூக ஊடகங்களில் பதிவிடப்படுவதையடுத்தே இந்த குறிப்பை வெளியிட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here