தடுப்பூசி ஏற்றப்பட்டவருக்கு உடல்நலக்குறைவு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது அதிக நம்பிக்கை இருந்து வந்தது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி பரிசோதனை மேற்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தற்போது பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“விவரிக்க முடியாத அளவிலான உடல்நலக்குறைவு“ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன பக்கவிளைவு ஏற்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here