இரண்டாவது தீ விபத்தும் கட்டுப்படுத்தப்பட்டது!

எம்டி நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட இரண்டாவது தீயும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது கப்பலில் தீப்பிளம்புகளோ, புகையோ தென்படவில்லையென கடற்படை அறிவித்துள்ளது.

இதையடுத்து, கப்பலை ஆழமான கடற்பகுதிக்கு இழுத்து செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, சங்கமன்கந்தையிலிருந்து 37 கடல் மைல் தொலைவில் கப்பல் உள்ளது.

இதேவேளை, கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் மற்றும் கிரேக்கத்தை சேர்ந்த 20 பணியாளர்களும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here