மனநிலை பாதிக்கப்பட்டவரை கழுத்தை நெரித்து கொன்ற வீடியோ: அமெரிக்க நகரமொன்றில் கூண்டோடு பதவிவிலகிய பொலிசார்!

அமெரிக்காவில் கருப்பின மனிதர்கள் கொல்லப்படுவது குறித்து அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்களினால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிந்திய நிலவரமாக, மனநிலை பாதிக்கப்பட்ட டானியல் ப்ரூட் என்பவரின் கொலை தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து ரோசெஸ்டரின் காவல்துறைத் தலைவர் லாரான் சிங்லேட்டரியும் அவரது அணியினரும் நேற்று செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தனர்.

நகரத்தில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், டேனியல் ப்ரூடின் குடும்பத்தினர் பொலிஸ் மூடிமறைப்பு குற்றச்சாட்டைத் தாக்கல் செய்ததையடுத்து, ரோசெஸ்டரின் காவல்துறைத் தலைவர் லாரான் சிங்லேட்டரி பதவி விலகினார்.

அதை தொடர்ந்து அவரது அணியினரும் விலகியுள்ளனர்.

41 வயதான கறுப்பின மனிதரான டானியல் ப்ரூட் என்பவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது, காவல்த்துறையின் பிடியிலேயே அவர் பாதிக்கப்படுவது புதிதாக வெளிவந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

ரோசெஸ்டரின் பொலிஸ் தலைமையகத்தின் முன் போராட்டக்காரர்கள்

இதையடுத்து, ரோசெஸ்டர் பொலிஸ் திணைக்கள ஊழியர்களுடன் சேர்ந்து காவல்துறைத் தலைவர் ராஜினாமா செய்தார்.

ரோச்செஸ்டர் காவல் துறையிலிருந்து தனது ராஜினாமாவை சிங்லேட்டரி செவ்வாய்க்கிழமை வெளிப்படுத்தினார்.

அவரது அறிக்கை பின்வருமாறு: “கடந்த இரண்டு தசாப்தங்களாக, நான் இந்த சமூகத்திற்கு மரியாதை, பெருமை மற்றும் மிக உயர்ந்த ஒருமைப்பாட்டுடன் சேவை செய்தேன். ஒருமைப்பாடு கொண்ட ஒரு மனிதனாக, வெளிப்புற நிறுவனங்கள் என் தன்மையை அழிக்க முயற்சிக்கும்போது நான் சும்மா உட்கார மாட்டேன். கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் எனது தன்மையையும் நேர்மையையும் அழிக்கும் முயற்சியாகும். ரோசெஸ்டர் காவல் துறை மற்றும் கிரேட்டர் ரோசெஸ்டர் சமூகத்தின் உறுப்பினர்கள் எனது நற்பெயரை அறிந்திருக்கிறார்கள், நான் எதற்காக நிற்கிறேன் என்பதை அறிவேன்.

ப்ரூடின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் நான் எடுத்த நடவடிக்கைகளின் தவறான விளக்கமும் அரசியல்மயமாக்கலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, நான் எதைக் குறிக்கிறேன் என்பதும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

சிக்காகோவைச் சேர்ந்த ஒரு கருப்பு மனிதர் டானியல் ப்ரூட், மார்ச் 30, 2020 அன்று இறந்தார்.

அவரது மரண விவகாரம் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தது. கருப்பினத்தவரிற்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள றிலையில், சில நாட்களின் முன் ப்ரூட் மரணம் தொடர்பான வீடியோ வெளியானது.

மார்ச் 23 அன்று, மனநிலை பாதிக்கப்பட்ட ப்ரூட் வீதியில் நிர்வாணமாக ஓடினார். அது குறித்து அவரது சகோதரன் பொலிசாருக்கு அறிவித்தனர். விளைவு- ஒரு வாரத்தின் பின்னர் ப்ரூட் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

ப்ருட்டின் உயிரிழப்பிற்கு ஒரே காரணம் காவல்த்துறையினரே, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை புதிதாக வெளியான வீடியோ காண்பிக்கிறது.

இது குறித்து ப்ரூட்டின் சகோதரர் தெரிவித்தபோது, “எனது சகோதரருக்கு உதவி பெற நான் அவசர இலக்கத்தை அழைத்தேன். சகோதரனை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வரவே பொலிசாரின் உதவியை நாடினேன். கொலை செய்ய அல்ல“ என்றார்.

ப்ரூட் நிர்வாணமாக வீதியில் படுக்க வைக்கப்பட்டு அவரது கழுத்தில் காவல்த்துறையினர் முழங்காலை அழுத்தி வைத்திருப்பதும், ப்ரூட் செயலிழந்து போவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், உயிர்காப்பு கருவி இல்லாமல் அவரால் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஒரு வாரத்தின் பின்- மார்ச் 30 அன்று உயிர்காப்பு கருவி அகற்றப்பட்டது.

மூச்சு திணறல் சிக்கல்களால் அவரது உடல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே மரணத்திற்கு காரணம் என வைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரூட்டின் மரணம் இப்போது நியூயோர்க் மாநில சட்டமா அதிபரின் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here