உருட்டி உருட்டி விசாரித்ததில் உண்மையை கக்கிய சாரதி!

கல்பிட்டி பகுதியில் வைத்து 10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவியிலிருந்து கல்பிட்டிக்கு தங்கத்தை கடத்தியபோது, பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தின் இருக்கைக்கு அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில், பாலாவியிலிருந்து கற்பிட்டிக்கு தங்கத்தை எடுத்து செல்லும் ஒப்பந்தத்தை தான் பெற்றிருந்ததாக குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு கடத்தப்படுவதற்காக இந்த தங்கம் எடுத்துசெல்லப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here