போலி வைத்தியர் கைது!

‘அக்குபஞ்சர்’ வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட போலி வைத்தியரொருவர் ஹட்டனல் பொலிஸாரால் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பகுதி மக்கள், ஹட்டன் ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்திடம் முன்வைத்த முறைப்பாட்டையடுத்து, பள்ளிவாயல் நிர்வாகம் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘அக்குபஞ்சர்’ வைத்தியத்துக்கான எந்தவொரு ஆவணமும் அவரிடம் இருக்கவில்லை.

ஹட்டன் ஹிஜிராபுரத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்றே அவர் சிகிச்சையளித்து வந்துள்ளார் எனவும், மூன்றாவது முறையும் வருகைதந்தபோதே வசமாக சிக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here