ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தக் கூடாது!

ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் கடந்த கால நல்லாட்சியின் போது தெளிவாகத் தெரிந்தன. முந்தைய அரசாங்கத்தின் போது நாட்டிற்கு ஏற்பட்ட பேரழிவை நாம் மீளவும் சந்திகக்கூடாது. பிரதமர் சொல்வதை ஜனாதிபதி செய்யாததாலும், ஜனாதிபதி சொல்வதை பிரதமர் செய்யாததாலும் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் விமலதர்ம தேரர் தெரிவித்தார்.

அவர் இன்று (08) மல்வத்து பீடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக ஜனாதிபதிக்கு, கட்டுப்பாடுகள் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். நாட்டின் மக்களுடன் கலந்தாலோசித்து நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிறகு ஒரு நிர்வாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அரசியலமைப்பின் 19 வது திருத்தம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டின் சார்பாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியது.

19 ஆவது திருத்தத்தில் நல்ல விடயங்களை பாதுகாக்கும் அதே வேளையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதும், தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு பதிலாக தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதும் நாட்டின் நலனுக்காகவே என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here