மாடு வெட்டும் தடை யோசனையை பெரமுன அங்கீகரித்தது: இறுதி முடிவு மஹிந்தவின் கையில்!

மாடு வெட்டுவதை தடை செய்யும் யோசனையை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு அங்கீகரித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்ற குழு கூட்டத்தில் யோசனையை சமர்ப்பித்தார். அதை எம்.பிக்கள் ஆமோதித்தனர்.

அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், பிரதமரின் திட்டத்தை எம்.பிக்கள் வரவேற்றதாக தெரிவித்தார்.

எனினும், எந்தவொரு உத்தியோகபூர்வ திட்டமும் பிரதமரால் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் இந்த முன்மொழிவை முன்வைக்க அவர் எதிர்பார்க்கிறார் என்றார்.

கால்நடை படுகொலை தொடர்பான திட்டத்தை எப்போது, ​​எப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதை பிரதமர் தீர்மானிப்பார் என்று அமைச்சர் ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here