கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,126 அக உயர்ந்தது.

தற்போது, 12 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 179 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உயர்ந்தது.

வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலிருந்து 8 பேரும், கொழும்பு கிழக்கு அடிப்படை வைத்தியசாலையிலிருந்து ஒருவரும் குணமடைந்து வெளியேறினர்.

தொற்று சந்தேகத்தில் 37 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here