மரணதண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணத்திற்கு எதிர்ப்பு: எதிரணி வெளிநடப்பு!

மரண தண்டனை கைதியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு பட்டி அணிந்தே சஜித் அணி உறுப்பினர்கள் பாராளுமன்றம் வந்திருந்தனர்.

மரண தண்டனை கைதியொருவர் எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனவும் வாதிட்டனர். இவ்விடயம் கருத்திற்கொள்ளப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here