ஐ.தே.கவின் புதிய பிரதித்தலைவர் திங்கள்கிழமை நியமனம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய பிரதி தலைவர் ஒருவர் எதிர்வரும் திங்கள் கிழமை நியமிக்கப்படவுள்ளார்.

கட்சியின் சட்டச் செயலாளர் நிசங்க நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

திங்கள் கிழமை பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய நியமனம் செய்யப்படும் என்றார்.

எனினும், பிரதி தலைவர் யார் என்பது இறுதி செய்யப்படவில்லை, பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன என்றார்.

ஐ.தே.கவின் புதிய தலைவர் 2021 ஜனவரி 1ஆம் திகதி பெயரிடப்படுவார். தற்போது பிரதி தலைவராக நியமிக்கப்படுபவர், 2021 ஜனவரி 1 அன்று கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here