உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் ஆயுட்காலம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழு 2019 செப்டம்பர் 20ஆம் திகதி நிறுவப்பட்டது. ஏப்ரல்  21 தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதும் ஆணைக்குழுவின் பணி.

இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன் ஆஜராகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here