முல்லைத்தீவு வைத்தியசாலை பிரச்சனையை ஆளுனரிக் கவனத்திற்கு கொண்டு சென்ற செல்வம் எம்.பி!

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பாக மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி குழு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சகிதம் வடமாகாண ஆளுநரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆளுனருக்கு கூட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனை செவிமடுத்து ஆளுனர் பிரச்சனைக்கு உரிய தீர்வை தான் பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்திருந்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here