32 ஆவது இளைஞர் விளையாட்டு விழாவின் ஒட்டுசுட்டான் பிரதேச கரப்பந்தாட்ட போட்டி சம்பியனானது சென் ஜோன்ஸ் மற்றும் பாரதி அணிகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற இளைஞர் விளையாட்டு விழாவின் 32ஆவது இளைஞர் விளையாட்டு விழா பிரதேச ரீதியான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 32 ஆவது இளைஞர் விளையாட்டு விழாவின் குழு போட்டிகள் இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் கரப்பந்தாட்டப் போட்டி நேற்றைய தினம் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு சென்ஜோன்ஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கூழாமுறிப்பு பகுதியில் இடம்பெற்றது

அந்த வகையில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியில் மோதிய முத்துஐயன்கட்டு இளைஞர் கழக அணியை சென்ஜோன்ஸ் இளைஞர் கழக அணி வீழ்த்தி வெற்றி வாகை சூடியது

அந்தவகையில் கூழாமுறிப்பு சென்ஜோன்ஸ் அணியினர் முதலாம் இடத்தையும் முத்துஐயன்கட்டு பாரதி இளைஞர் கழக அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்

அதே போன்று ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியிலே கரிப்பட்டமுறிப்பு புதியநகர் ஈகிள்ஸ் இளைஞர் கழக அணியினை எதிர்த்து போட்டியிட்ட முத்துஐயன்கட்டு பாரதி இளைஞர் களாக அணியினர் வெற்றி வாகை சூடினர்

அந்தவகையில் முத்துஐயன்கட்டு பாரதி இளைஞர் கழக அணியினர் முதலாம் இடத்தையும் கரிப்பட்ட முறிப்பு புதிய நகர் ஈகிள்ஸ் இளைஞர் கழக அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

குறித்த போட்டியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு கைலாகு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி அங்கு உரை நிகழ்த்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here