இளம்பெண் தற்கொலை: நிச்சயதார்த்தத்திற்கு பின் ஏமாற்றிய காதலன் கைது!

கேரளத்தில் இளம் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் 24 வயதான வாலிபரை கோட்டயம் பொலிசார் கைது செய்துள்ளனர். யுவதியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததன் எதிரொலியாகவே யுவதி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கோட்டையம் நகரை சேர்ந்த ராம்ஸி (24) என்பவரின் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பல்லிமுக்குவைச் சேர்ந்த ஹாரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு போலீசார் அவரை வரவழைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

ராம்ஸி வியாழக்கிழமை அவரது வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவருக்கும், ஹாரிஸூக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. பின்னர் திடீரென ஹாரிஸ் திருமணத்திற்கு மறுத்தார். இந்த விரக்தியிலேயே ராம்சி தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோர் கோட்டிடையம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ராம்ஸி மற்றும் ஹாரிஸ் இருவரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். ராம்ஸியின் மரணத்தில் தொலைக்காட்சி சீரியல் நடிகையொருவரின் பங்கு குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ராம்சியின் உடல் வீட்டு அறையில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

ஹாரிஸுடனான அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வளையல் விழா உள்ளிட்ட சடங்குகள் முடிந்தபின் ஹாரிஸ் பின்வாங்கினார். இது ராம்ஸியை விரக்தியடைய வைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ராம்ஸி குடும்பத்திடமிருந்து அவர் அடிக்கடி பணம் வாங்கியதாக ராம்சியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் ரூ 5 லட்சம் ரூபா வரை வாங்கியதாகவும், அவர் மற்றொரு திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

பிரபல சீரியர் நடிகையொருவரின் மைத்துனர் ஹாரிஸ். இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஹாரிஸின் தாயுடன் ராம்ஸி நடத்திய தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. உரையாடலில், ஹாரிஸுடன் வாழ முடியாவிட்டால் தற்கொலை செய்து விடுவேன் என ராம்ஸி அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here