எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ!

கிழக்கு கடற்பரப்பில் தரித்து நிற்கும் எண்ணெய்க்கப்பலான எம்ரி நியூ டயமண்ட் கப்பலில் மீண்டும் தீ ஏற்பட்டுள்ளது.

கடலில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அதிக காற்று வீசுவதால் கப்பலில் தீ மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தீவிர வெப்பநிலை மற்றும் தீப்பொறிகளின் விளைவுகளிலிருந்து தீப்பிடித்தது என்று கடற்படை தெரிவித்தது.

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள், விமானம் தீயை கட்டுப்படுத்த கூட்டாக செயல்படுகின்றன.

தீவிர முயற்சியின் பின்னர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கப்பலில் தீயை அணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தீப்பற்றியுள்ளது. தீயை கட்டுப்படுத்த நீர் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த கப்பல் சங்கமன்கந்தையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் தரித்து நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here