மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவி திட்டப் பணிப்பாளர்கள் இடமாற்றம்

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய உதவி திட்டப் பணிப்பாளராக எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் புதிய உதவி திட்டப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்ற எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இருந்து ஓட்டமாடி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றதையடுத்து காத்தானகுடி பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் உதவி திட்டப்பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி திட்டப் பணிப்பாளராக நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படாத நிலையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் பதில் உதவி திட்டப் பணிப்பாளராக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here