வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பள மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்டாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபையின் ஒருதொகுதி சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய அவர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் காலை7 மணிமுதல் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், திலீபன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிருந்தனர்.

இது தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி உரிய அதிகாரிகளுடனும், ஊழியர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இதற்கான தீர்வினை பெறமுயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலீபனால் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here