அமெரிக்கா, சீனா, இந்தியாவிற்கான தூதர்கள் தயார்?

சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கான தூதர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவிற்கான தூதராக வெளியுறவு அமைச்சின் முன்னாள் செயலாளரான பாலித கோஹேனவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவரது பெயர் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

வெளியுறவு செயலாளராக கடமையாற்றி வந்த ரவிநாத் ஆரியசிங்க, அமெரிக்காவிற்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here