வித்தியா கொலை விவகாரத்தில் விஜயகலாவையும், வலது கையையும் ஆணைக்குழுவில் முன்னிலையாக உத்தரவு!

ஐ.தே.வின் யாழ் மாவட்ட அமைப்பாளர், முன்னாள் எம்.பி விஜயகலா மகேஸ்வரனையும், கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தரான குமரன் சர்வானந்தாவையும் அரசியல் பழிவாங்கல்களிற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 17ஆம் திகதி முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி, தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள  பொலிஸ் கான்ஸ்டபின் ஞானலிங்கம் மயூரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், விஜயகலா அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (05) ஆணைக்குழு முன் சாட்சியங்களை அளித்த ஞானலிங்கம் மயூரன், சிவலோகநாதன் வித்தியா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேகநபர் மகாலிங்கம் சசிகுமார்தொடர்பு பட்டுள்ளார் என்று கூறினார்.

2011 ல் சுன்னகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில், மயூரன் உள்ளிட்ட ஐந்து பேர் 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனை, விஜயகலாவின் அழுத்தத்தினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னாள் இராஜாங் அமைச்சர்கள் விஜயகால மகேஸ்வரன், குமரன் சர்வானந்தா ஆகியோரும் செப்டம்பர் 17 ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராக வரவழைக்கப்பட்டனர்.

விஜயகலாவின் வலது கையாக கருதப்படும்குமரன் சர்வானந்தன் இம்முறை ஐ.தே.க சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். தேர்தலின் முன்பாக சாவகச்சேரியிலுள்ள அவரது அலுவலகத்திற்குள்ளிருந்து யுவதியொருவர் அலறியபடி வெளியே தப்பியோடி வந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here